பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனமாடுவதால் அனிதா சம்பத் வீட்டில் பெரும் சலசலப்பு : நடந்தது என்ன

தமிழ்த் தொலைக்காட்சிகளில் பிரபல்யமான தொலைக்காட்சியாக இருப்பது விஜய்த் தொலைக்காட்சியாகும். இதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் எல்லாம் ஹிட்டானவை. அந்த வகையில் இதில் ஹிட்டாக ஓடி முடிந்த நிகழ்ச்சி தான் பிக்பாஸ். மேலும் இந்நிகழ்ச்சியானது இது வரைக்கும் 4 சீசன்களைக் கடந்துள்ளது.

அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 4 இல் போட்டியாளராகப் பங்கு கொண்டு பிரபல்யமானவர் தான் அனிதா சம்பத். மேலும் இவர் சன்டிவியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். அத்தோடு விஜய் நடித்த சர்கார் படத்திலும் செய்தி வாசிக்கும் காட்சி ஒன்றில் நடித்தார். அதன் பின்னர் காப்பான் உள்ளிட்ட சில படத்தில் நடித்திருந்தார்

இதற்கிடையில் தனது நீண்டநாள் காதலரை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டதாக திடீரென அறிவித்து அனைவருக்கும் அதிர்ச்சியளித்திருந்தார். அதன்பின்னர் பிக்பாஸ் மூலமே ரசிகர்களிடையே பிரபல்யமானார். அத்தோட தற்பொழுது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் BB ஜோடிகள் நிகழ்ச்சியில் ஷாரிக்குடன் நடனமாடி வருகின்றார்.

மேலும் ஷாரிக்குடன் மிகவும் நெருக்கமாக நடனமாடி வருவதால் பல சர்ச்சைகளை சந்தித்து வரும் அனிதாவை பலர் இஷ்டத்துக்கும் விமர்சிக்கின்றனர். இதனால் அனிதா வீட்டில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளதாம். ஷாரிக் எனக்கு தம்பி என அனிதா கூறியும் அதற்கெல்லாம் பெரிதாக ரியாக்ட் செய்யாமல் தொடர்ந்து தனது நடனத்தில் கவனத்தை செலுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.