இனி அதிக விலை கொடுத்து வாங்காதீங்க ஈசியா வீட்டிலேயே செய்யலாம் | How to make milk powder

எமது வாசகர்களுக்கு மூலத்தில் வணக்கங்கள் பால் பவுடரை இனி அதிக விலை கொடுத்து வாங்காதீங்க ஈசியா வீட்டிலேயே செய்யலாம். ஆனால் கடையில் நீங்கள் வாங்கிய பால், இயற்கையான பாலா அல்லது இரசாயன பொருட்களை கலந்து தயாரித்த பாலா என்பதை எளிதில் கண்டுபிடித்து விடலாம்.இதற்கு செலவு வெறும் 50 பைசாதான். அதுவும் வீட்டில் நீங்களே கண்டுபிடிக்கலாம்.

இதை முழுவதும் படித்து விட்டு கீழுள்ள பால் பவுடர் தயாரிப்பு செய்முறையை அறிந்து கொள்ளுங்கள் ஏனென்றால் அந்த பால் மூலம் தான் நீங்கள் பால் பவுடர் தயாரிக்க போகின்றீர்கள் எனவே நீங்கள் தயாரித்தாலும் அதன் மூலம் இரசாயன பொருட்கள் கலக்க வாய்ப்புள்ளது.

உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வது உங்களுக்கு தெரியும். பாலில் தண்ணீர் ஊற்றுவார்கள். சில நேரங்களில் தண்ணீரில் பாலை கலப்பார்கள்.இப்போது இதனை எல்லாம் மிஞ்சும் வகையில், இராசயன பொருட்களை பயன்படுத்தி செயற்கையாக பால் தயாரித்து வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் இரசாயன பொருட்களை பயன்படுத்தி செயற்கையான முறையில் பால் தயாரிக்கும் பால் பண்ணையை பஞ்சாப் மாநிலத்தில் உள்ள ராஜ்புரா என்ற ஊரில் காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.

இங்கு காஸ்டிக் சோடா, யூரியா, பால் பவுடர், பட்டர் ஆயில் போன்றவைகளை கலந்து இயந்திரங்களை பயன்படுத்தி பால் தயாரித்துள்ளதை காவல் துறையினர் கண்டு பிடித்தனர்.
அந்த ரசாயன பால் பண்ணையில் 37 மூட்டை காஸ்டிக் சோடா, 15 மூட்டை பால் பவுடர், நெய் மற்றும் பால் தயாரிப்பதற்கான இயந்திரம் இருந்தது.

இந்த தொழிற்சாலை பல வருடங்களாக இயங்கி வந்ததை காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.முன்பு ஆவின், அமுல் போன்ற அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனங்கள் மட்டுமே பாலை விற்பனை செய்து வந்தன. தற்போது இந்த துறையில் தனியார் துறை நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன.

பிளாஸ்டிக் பாக்கெட்டில் உள்ள பாலை எல்லாம் தரமான பால் தான் என்று மக்கள் நம்பி வாங்கிச் செல்கின்றனர்.இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு சிலர், இரசாயன பாலையும் பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மாதிரியான செயற்கை பாலை சமீபத்தில் தமிழகத்தில் கூட அரசு அதிகாரிகள் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இனி நீங்களே வெறும் 50 பைசா செலவில் வீட்டிலேயே இரசயன பாலா அல்லது தரமான பாலா என்பதை கண்டுபிடிக்கலாம்.

இதற்கான வழியை ஹரியானா மாநிலத்தில் ஹிஸ்ஸார் என்ற நகரத்தில் உள்ள குரு ஜாம்ஷேர்வர் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவர் கண்டு பிடித்துள்ளார்.

இந்த பல்கலைக் கழகத்தின் உணவு பதப்படுத்தும் துறை தலைவர் டாக்டர் காட்கரின் வழிகாட்டுதல்படி ஆராய்ச்சி மாணவரான தீபக் கண்டுபிடித்துள்ளார்.இதன்படி பாலில் ஒரு ஆசிட்டை சில சொட்டு ஊற்றி, மற்றொரு இரசாயன பொருளை கலக்க வேண்டும்.

இந்த பரிசோதனை செய்யும் போது, பால் பிங்க் கலராக மாறினால், அது இரசாயன பொருட்களை கொண்டு தயாரிக்கப்பட்ட செயற்கை பால் என்ற முடிவுக்கு வந்து விடலாம். இரசாயணம் கலக்கப்படாத தரமான பாலாக இருந்தால், பாலின் நிறம் மாறாது.இந்த கண்டுபிடிப்பு குறித்து டாக்டர் காட்கர் கூறுகையில், இந்த பரிசோதனையில் பயன்படுத்தப்படும் ஆசிட், இரசாயன பொருளால் எவ்வித கெடுதலும் ஏற்படாது. இதை பயன்படுத்தி இரசாயன பாலை கண்டுபிடித்து விடலாம்.

இதன் காப்புரிமைக்கு விண்ணப்பிக்க உள்ளோம். காப்புரிமை கிடைத்த பிறகு, பொதுமக்களும் பயன்படுத்தி இராசயன பாலை கண்டு பிடிக்கும் முறையை பகிரங்கமாக அறிவிப்போம் என்று கூறினார்.