லட்சங்களின் மருந்து இதற்கு முன்னால் தோல்வி 100 வருடம் உயிர் வாழ 7 பிறவிக்கு இது வராது

இன்று குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நிறைய பேர் விரும்பி சாப்பிடும் ஓர் ஜங்க் உணவு தான் பிட்சா. விடுமுறை நாட்கள் வந்தோலோ, சமைக்க முடியாவிட்டாலோ, பலரும் பிட்சாவையே ஆர்டர் செய்து அதிகம் சாப்பிடுகின்றனர். பிட்சா மைதாவினால் செய்யப்படுவது மட்டுமின்றி, இதில் பல்வேறு பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களும் சேர்க்கப்படுவதால், ஆரோக்கியமற்ற உணவுப் பொருட்களுள் ஒன்றாக உள்ளது.

ஆனால் இந்த பிட்சாவின் மீது சேர்த்து சாப்பிடக் கொடுக்கப்படும் பச்சை நிறத்திலான ஒருவித நறுமணமிக்க இலைகள் என்னவென்று தெரியுமா? அது தான் மருத்துவ குணம் அதிகம் கொண்ட உலர்ந்த கற்பூரவள்ளி இலைகள். இதன் மருத்துவ குணத்தால் நோய்களைக் குணப்படுத்த கை மருத்துவத்தில் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கற்பூரவள்ளி இலையை பச்சையாகவோ அல்லது உலர்ந்த வடிவிலோ உட்கொள்ளலாம். இல்லாவிட்டால், கற்பூரவள்ளியின் எண்ணெயைக் கூட பயன்படுத்தலாம். இந்த கட்டுரையில் உங்களுக்குத் தெரியாத சில கற்பூரவள்ளியின் நன்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

100 கிராம் கற்பூரவள்ளியில் 4.3 கிராம் கொழுப்பு, 25 மிகி சோடியம், 1,260 மிகி பொட்டாசியம், 69 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 9 கிராம் புரோட்டீன் உள்ளது. மேலும் வைட்டமின் ஏ (34%), கால்சியம்(159%), வைட்டமின் சி (3%), இரும்புச்சத்து (204%), வைட்டமின் பி6 (50%) மற்றும் மக்னீசியம் (67%) உள்ளது.இப்போது கற்பூரவள்ளி இலைகளால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து காண்போம்.